ஆட்டு சந்தையில் ஆடுகள் விற்பனை படுஜோர்


ஆட்டு சந்தையில் ஆடுகள் விற்பனை படுஜோர்
x

கடூரில் துர்கா தேவி கோவில் திருவிழாவையொட்டி ஆட்டு சந்தையில் ஆடுகள் விற்பனை படுஜோராக நடந்தது.

சிக்கமகளூரு:-

ஆட்டு சந்தை

சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா அந்தரகட்டேயில் பிரசித்தி பெற்ற துர்கா தேவி கோவில் உள்ளது. இந்த கோவில் தேர் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. வருகிற 4-ந்தேதி அங்கு தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் துர்கா தேவி கோவில் திருவிழாவையொட்டி நேற்று அந்தப்பகுதியில் ஆட்டு சந்தை நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள், விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். மேலும் ஆடுகளை வாங்குவதற்காகவும் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் அங்கு ஆட்டு சந்தையில் விற்பனை படுஜோராக நடந்தது. வியாபாரிகளிடம் பேரம் பேசி போட்டி போட்டு பொதுமக்கள் ஆடுகளை வாங்கி சென்றனர்.

கிடா விருந்து

இந்த சந்தையில் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை ரகம் மற்றும் எடையின் வகையில் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. கோவில் திருவிழாவையொட்டி கிடா விருந்து வைக்க ஏற்பாடு செய்துள்ளவர்கள் அதிகமான ஆடுகளை வாங்கி சென்றனர். மேலும் தேர்தல் நெருங்கி வருவதால் வாக்காளர்களை கவருவதற்காக அரசியல்வாதிகளும் கிடா விருந்து வைக்க ஏராளமான ஆடுகளை வாங்கினர்.

அந்தப்பகுதியில் சில நாட்களில் கிடா விருந்து நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று நடந்த ஆட்டு சந்தையில் பல லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகி உள்ளது. இதனால் வியாபாரிகளும், விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story