இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை; கோழிப்பண்ணை மேற்பார்வையாளருக்கு வலைவீச்சு


இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை; கோழிப்பண்ணை மேற்பார்வையாளருக்கு வலைவீச்சு
x

ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோழிப்பண்ணை மேற்பார்வையாளரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மங்களூரு;

பாலியல் தொல்லை...

தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா அரியட்கா கிராமத்தை சேர்ந்தவர் உமர். இவர் அதே பகுதியில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார்.

இவருடன் இந்த பண்ணையில் பெண்கள் உள்பட பலர் பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில் பண்ணையில் வேலை செய்து வரும் இளம்பெண்ணுடன், உமருக்கு பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கத்தை பயன்படுத்தி இளம்பெண்ணை தனியாக சந்தித்து பேசிவந்துள்ளார். அப்போது இளம்பெண்ணை, உமர் தனது செல்போனில் ஆபாசமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த (மே) மாதம் 5-ந் தேதி பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்தபோது இளம்பெண்ணை தனியாக அழைத்து தனது ஆசைக்கு இணங்குமாறு கூறியுள்ளார்.

ஆனால் அதற்கு இளம்பெண் மறுத்துள்ளார். இதையடுத்து உமர், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

வலைவீச்சு

மேலும் உனது ஆபாச படம், வீடியோ இருப்பதாகவும் அதனை வெளியிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன இளம்பெண் சம்பியா போலீசில் புகார் அளித்தார்.

இதற்கிடையே விஷயம் தெரிந்து உமர் தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து சம்பியா போலீசார் வழக்குப்பதிவு செய்து உமரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story