மத்திய விசாரணை அமைப்பு முன் ஆஜராவது நமது கடமை - சஞ்சய் ராவத்
மத்திய விசாரணை அமைப்பு முன் ஆஜராவது நமது கடமை என சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
மும்பை,
நிலமோசடி தொடர்பாக பதியப்பட்ட வழக்கில் இன்று நேரில் ஆஜராகும்படி சிவசேனா மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ராவத்திற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன் சஞ்சய் ராவத் இன்று ஆஜரானார்.
அவரிடம் 10 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணைக்கு பின் சஞ்சய் ராவத் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது சஞ்சய் ராவத் பேசுகையில், மத்திய விசாரணை குழு மனதில் எதேனும் சந்தேகங்கள் அவர்களின் முன் நேரில் ஆஜராவது நமது கடமை. அப்போது தான் நம் மீது பொதுமக்களுக்கு எந்த சந்தேகமும் எழாது. எங்களிடம் 10 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. நாங்கள் முழுமையாக ஒத்துழைப்பு அளித்தோம்' என்றார்.
Related Tags :
Next Story