திருமண ஆசை காட்டி ஆசிரியையிடம் ரூ.7½ லட்சம் மோசடி
திருமண ஆசை காட்டி ஆசிரியையிடம் ரூ.7½ லட்சம் மோசடி நடந்துள்ளது.
பெங்களூரு: பெங்களூரு சர்ஜாபுரா மெயின் ரோட்டில் 30 வயது பெண் வசிக்கிறார். இவர், ஆசிரியை ஆவார். இவருக்கும், ஒரு வாலிபருக்கும் தனியார் திருமண தகவல் மையம் மூலமாக அறிமுகம் ஏற்பட்டது. பின்னா் ஆசிரியையை திருமணம் செய்வதாக வாலிபர் கூறினார். இதனை அவரும் நம்பினார்.
இதற்கிடையில், தனது தந்தை உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால், சிகிச்சைக்காக ரூ.7½ லட்சம் கொடுக்கும்படி கூறி ஆசிரியையிடம் இருந்து வாலிபர் வாங்கி கொண்டார். அதன்பிறகு, ஆசிரியை திருமணம் செய்யாமலும், ரூ.7½ லட்சத்தை திரும்ப கொடுக்காமலும் வாலிபர் மோசடி செய்து விட்டார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை தேடிவருகிறார்கள்.
Related Tags :
Next Story