முட்டளவு தேங்கிய வெள்ளத்தில், படகில் சென்ற சித்தராமையா


முட்டளவு தேங்கிய வெள்ளத்தில், படகில் சென்ற சித்தராமையா
x

பெங்களூருவில் முட்டளவு தேங்கிய நீரில் சித்தராமையா படகில் சென்றதாக கூறி சட்டசபையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை விமர்சித்தார்.

பெங்களூரு:

பெங்களூருவில் முட்டளவு தேங்கிய நீரில் சித்தராமையா படகில் சென்றதாக கூறி சட்டசபையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை விமர்சித்தார்.

நிர்வாகிகள் யார்

கர்நாடக சட்டசபையில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசும்போது, பெங்களூருவில் வெள்ள சேதங்களை பார்வையிட சென்றதாகவும், சாலையில் அதிக நீர் தேங்கி இருந்ததால் படகில் சென்று சேதங்களை ஆய்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறினார். அப்போது முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை குறுக்கிட்டு பேசும்போது, 'பெங்களூருவில் சாலையில் முட்டளவுக்கு தான் மழைநீர் தேங்கி இருந்தது. அதில் சித்தராமையாவை அவரது கட்சி நிர்வாகிகள் படகில் அழைத்து சென்றுள்ளனர். அந்த நிர்வாகிகள் யார்?' என்றார்.

அதற்கு பதிலளித்த சித்தராமையா, 'முட்டளவு தேங்கி நிற்கும் நீரில் படகு செல்ல சாத்தியமில்லை. அங்கு சாலைகளில் அதிகளவில் மழைநீர் தேங்கி இருப்பதாக ஊடகங்களில் செய்தி பார்த்தேன். அதன் பிறகு அங்கு சேதங்களை பார்வையிட சென்றேன்' என்றார்.

வெள்ள பாதிப்புகள்

அப்போது மீண்டும் குறுக்கிட்டு பேசிய பசவராஜ் பொம்மை, 'நான் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தபோது சாலையில் 3 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கி இருந்தது. ஆனால் நீங்கள் சென்றபோது அந்த நீர் வடிந்திருந்தது. உங்களை யாரோ தவறாக வழிநடத்தியுள்ளனர்' என்றார்.

அதைத்தொடர்ந்து பேசிய சித்தராமையா, 'நான் முதல்-மந்திரியாக இருந்தபோது ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றினேன். சுமார் 600 கட்டிடங்கள் இடிக்கப்படாமல் இருந்தன. அந்த கட்டிடங்களை இடித்திருந்தால் பெங்களூருவில் இந்த வெள்ளம் ஏற்பட்டிருக்காது' என்றார்.


Next Story