ஆடு மேய்த்த சிறுவனை பள்ளியில் சேர்த்த சித்தராமையா


ஆடு மேய்த்த சிறுவனை பள்ளியில் சேர்த்த சித்தராமையா
x

சித்ரதுர்காவில் ஆடு மேய்த்த சிறுவனை முதல்-மந்திரி சித்தராமையா, அரசு பள்ளியில் சேர்த்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

சித்ரதுர்கா:

சித்ரதுர்கா மாவட்டம் செல்லக்கெரே அருகே பசவாபுரா கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவரது மகன் யோகேஷ்(வயது 11). இந்த சிறுவன் பள்ளிக்கு செல்லாமல் ஆடுகளை மேய்த்து வந்தான். ஏழ்மை காரணமாக பள்ளிக்கு செல்லாமல் ஆடுகளை மேய்த்து வருவது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. அதுபற்றி முதல்-மந்திரி சித்தராமையாவின் கவனத்திற்கும் சென்றது. உடனடியாக தனது டுவிட்டர்(எக்ஸ்) பதிவில் பசவாபுரா கிராமத்தை சேர்ந்த சிறுவனை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கும்படி கல்வித்துறை அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டு இருந்தார்.

அவரது உத்தரவை தொடர்ந்து சிறுவன் யோகேசை, பசவாபுரா கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் அதிகாரிகள் சேர்த்தனர். அங்கு அவன் 6-ம் வகுப்பில் சேர்ந்து படித்து வருகிறான். மாணவனுக்கு தேவையான புத்தகம், பை, சீருடை உள்ளிட்ட அனைத்தையும் ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.


Next Story