கோலாா் தொகுதியில் போட்டியிட வலியுறுத்தி சித்தராமையா வீட்டை முற்றுகையிட்டு ஆதரவாளர்கள் போராட்டம்


கோலாா் தொகுதியில் போட்டியிட வலியுறுத்தி சித்தராமையா வீட்டை முற்றுகையிட்டு ஆதரவாளர்கள் போராட்டம்
x

கோலார் தொகுதியில் போட்டியிட வலியுறுத்தி சித்தராமையா வீட்டை முற்றுகையிட்டு ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.

பெங்களூரு:

கடும் அதிருப்தி

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கோலார் தொகுதியில் போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற வேட்பாளர்கள் தேர்வு குழு கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அதில் ராகுல் காந்தி, சித்தராமையா கோலாரை தவிர்த்துவிட்டு பாதுகாப்பான அதாவது வெற்றி உறுதியாக இருக்கும் தொகுதியில் போட்டியிடுமாறு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் கோலார் தொகுதியில் சித்தராமையா போட்டியிட மாட்டார் என்று தகவல் வெளியானது.

இதனால் கடும் அதிருப்தி அடைந்த அவரது ஆதரவாளர்கள் கோலாரில் இருந்து புறப்பட்டு பெங்களூருவுக்கு வந்து சித்தராமையா வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சித்தராமையா கோலார் தொகுதியிலேயே போட்டியிடுமாறு கூறி அவர்கள் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். அப்போது சித்தராமையா பேசும்போது கூறியதாவது:-

முடிவு செய்வேன்?

நான் டெல்லி சென்று இருந்தபோது, ராகுல் காந்தி என்னிடம் வெற்றி உறுதியாக உள்ள தொகுதியில் போட்டியிடுமாறு கேட்டு கொண்டார். ஏனென்றால் நான் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்ய வேண்டி உள்ளதால், நான் போட்டியிடும் தொகுதியில் அதிகமாக பிரசாரம் செய்ய முடியாது என்றார். இதுகுறித்து எனது நண்பா்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் ஆலோசித்து முடிவு எடுப்பதாக கூறினேன்.

ராகுல் காந்தி எனக்கு ஆலோசனை மட்டுமே கூறியுள்ளார். அதனால் நண்பர்கள், குடும்பத்தினருடன் ஆலோசித்து கோலாாில் போட்டியிடுவதா? வேண்டாமா? என்பது குறித்து விரைவாக முடிவு செய்வேன்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.


Related Tags :
Next Story