இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்று சற்று உயர்வு


இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்று சற்று உயர்வு
x

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 126 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. கடந்த சில வாரங்களாக தினசரி கொரோனா பாதிப்பு சற்றேறக்குறைய 100 என்ற அளவிலே பதிவாகி வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 126 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 74 ஆக இருந்தது. நேற்று 102 ஆக உயர்ந்த நிலையில், இன்று புதிதாக 126 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது சற்று உயர்ந்துள்ளது.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 84 ஆயிரத்து 502 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 113 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 51 ஆயிரத்து 910 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 1,835 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 12 அதிகமாகும். தொற்று பாதிப்பால் நேற்று கர்நாடகாவில் ஒருவர் இறந்துள்ளார். மொத்த பலி எண்ணிக்கை 5,30,757 ஆக உயர்ந்துள்ளது.

1 More update

Next Story