சிவமொக்கா விமான நிலையத்திற்கு குவெம்பு பெயர் சூட்ட முடிவு
சிவமொக்கா விமான நிலையத்திற்கு தேசிய கவி குவெம்பு பெயர் சூட்ட மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதை வருகிற 27-ந் தேதி பிரதமர் மோடி அறிவிக்க இருக்கிறார்.
சிவமொக்கா:-
புதிய விமான நிலையம்
சிவமொக்கா மாவட்டம் சோகானா பகுதியில் புதிய விமான நிலையம் கட்டும் பணிகள் முடிந்துள்ளது. தாமரை வடிவிலான இந்த விமான நிலையத்தை வருகிற 27-ந் தேதி (திங்கட் கிழமை) பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கிறார். இதற்கிடையில் இந்த விமான நிலையத்திற்கு யார் பெயர் வைப்பது என்ற குழப்பம் ஏற்பட்டிருந்தது. கர்நாடக பா.ஜனதா தரப்பில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் பெயர் வைக்கவேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால் அதற்கு எடியூரப்பா மறுத்துவிட்டார்.
எனது பெயரை வைக்கவேண்டாம். தேசிய கவி குவெம்பு பெயரை வைக்கும்படி கூறினர். இது தொடர்பாக அவர் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை சந்தித்து, பேசியதாக கூறப்படுகிறது. அதன்படி மாநில அரசு குவெம்பு பெயர் வைப்பதற்கு முன் வந்தது. இது குறித்து மாநில முதல்-மந்திரி பசவராஜ் பொம்ைம, டெல்லியில் பா.ஜனதாவை சேர்ந்த தலைவர்களுடன ஆலோசித்ததாக கூறப்படுகிறது. அவர்களின் ஒப்புதலின் பேரில் குவெம்பு பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டது.
குவெம்பு பெயர்
இதற்கான அதிகார பூர்வ அறிவிப்பை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கடந்த வாரம் நடந்த மந்திரிசபை கூட்டத்தில் வெளியிட்டார். அப்போது மத்திய அரசு மற்றும் முன்னாள் முதல்-மந்திரியின் கோரிக்கையின் பேரில் சிவமொக்கா சோகானே விமான நிலையத்திற்கு குவெம்பு பெயர் வைக்கப்படும் என்று கூறினார். அதே போல சிவமொக்கா ரெயில் நிலையத்திற்கு கெவுதி சிவப்பாநாயக்் பெயரை வைக்கப்படும் என்று கூறியுள்ளார். இந்த பெயர்களை பிரதமர் மோடி வருகிற 27-ந் தேதி நடைபெறும் விமான நிலைய திறப்பு நிகழ்ச்சியின் போது, அறிவிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையத்தில் உள்ள நுழைவாயில் மற்றும் பயணிகள் ெவறியேறு பகுதிகள், முக்கிய அறைகளின் பெயர் பலகைகள், அறிவிப்பு பலகைகள் கன்னட மொழியில்லை. மாறாக இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது. இந்த பெயர் பலகை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.