மேற்கு வங்காளம்: லாரி மீது கார் மோதி விபத்து.. 6 பேர் பலி
விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொல்கத்தா,
மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள கலியாசாக்கில் இருந்து மால்டா நகருக்கு கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. காரில் 6 பேர் பயணம் செய்தனர்.
கூர் ரெயில் நிலையம் அருகே கார் வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த அனைவரும் மால்டா மாவட்டத்திலுள்ள அலியூரை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story