மின்கம்பம் சாய்ந்து ரெயில்வே மின்கம்பி மீது விழுந்து விபத்து: 6 தொழிலாளர்கள் மின்சாரம் பாய்ந்து பலி


மின்கம்பம் சாய்ந்து ரெயில்வே மின்கம்பி மீது விழுந்து விபத்து: 6 தொழிலாளர்கள் மின்சாரம் பாய்ந்து பலி
x

ரெயில்வே மின்கம்பி உள்ள பகுதியில் மின்கம்பத்தில் ஏறி 6 தொழிலாளர்கள் வேலைபார்த்துக்கொண்டிருந்தனர்.

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் தண்ட்பட் மாவட்டத்தில் நிஜித்பூர் பகுதியில் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையம் அருகே உள்ள மின்கம்பத்தில் தொழிலாளர்கள் இன்று வேலை செய்துகொண்டிருந்தனர்.

மின்கம்பத்தில் ஏறி தொழிலாளர்கள் 6 பேர் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக மின்கம்பம் சாய்ந்து அருகே சென்றுகொண்டிருந்த ரெயில்வே மின்கம்பி மீது விழுந்தது.

இதில், மின்கம்பத்தில் இருந்த அனைவரும் ரெயில்வே உயர் மின் அழுத்த கம்பியில் விழுந்தனர். இதனால், ஊழியர்கள் 6 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இந்த சம்பவத்தில் தொழிலாளர்கள் 6 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story