இந்தியாவில் சற்று உயர்ந்த கொரோனா பாதிப்பு - 65 பேருக்கு தொற்று உறுதி


இந்தியாவில் சற்று உயர்ந்த கொரோனா பாதிப்பு - 65 பேருக்கு தொற்று உறுதி
x

தொற்று மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,579 ஆகக் குறைந்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பிறகு நேற்று முன்தினம் தினசரி கொரோனா பாதிப்பு 33 ஆக குறைந்தது. நேற்று இது இரு மடங்காக அதிகரித்து 65 ஆக பதிவானது. இதுவரை இந்த தொற்று 4 கோடியே 49 லட்சத்து 94 ஆயிரத்து 97 பேரைப் பாதித்துள்ளது.

நேற்று தொற்றில் இருந்து 90 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 4 கோடியே 44 லட்சத்து 60 ஆயிரத்து 613 பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 27 குறைந்தது. இதையடுத்து தொற்று மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,579 ஆகக் குறைந்துள்ளது. கேரளாவிலும், உத்தரபிரதேசத்திலும் தலா ஒருவர் என தொற்றால் நேற்று 2 பேர் இறந்தனர். இதனால் தொற்றால் இறந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 905 ஆக உயர்ந்துள்ளது.


Next Story