குடகில் இருந்து கேரளாவிற்கு லாரியில் கடத்திய ரூ.4 லட்சம் பலா மரக்கட்டைகள் பறிமுதல்


குடகில் இருந்து கேரளாவிற்கு லாரியில் கடத்திய ரூ.4 லட்சம் பலா மரக்கட்டைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 14 Oct 2022 12:30 AM IST (Updated: 14 Oct 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

குடகில் இருந்து கேரளாவிற்கு லாரியில் ரூ.4 லட்சம் பலா மரக்கட்டைகளை கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

குடகு;


குடகு மாவட்டம் பொன்னம்பேட்டை தாலுகா கோனிகொப்பாவை அடுத்த திதிமதி வனப்பகுதியில் இருந்து பலா மரங்களை வெட்டி கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் திதிமதி அருகே தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த கேரளா பதிவெண் கொண்ட லாரியை போலீசார் மறித்து சோதனை செய்ய முயற்சித்தனர்.

இதை பார்த்த லாரி டிரைவர் போலீசாருக்கு பயந்து, லாரியை நிறுத்திவிட்டு தப்பியோட முயற்சித்தார். உடனே போலீசார் அவரை துரத்தி பிடித்தனர். பின்னர் லாரியில் சோதனை நடத்தினர். அப்போது அதில் பலா மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து டிரைவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் அவர் கேரள மாநிலம் கோழிக்கோடுவை சேர்ந்த சுக்கூர் என்று தெரியவந்தது. குடகு மாவட்டம் திதிமதி வனப்பகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்படும் பலா மரங்களை கேரளாவிற்கு கடத்தி சென்று விற்பனை செய்து வந்ததாக தெரியவந்தது. இவர் கொடுத்த தகவலை வைத்து ரூ.8 லட்சம் மதிப்பிலான லாரி மற்றும் ரூ.4 லட்சம் மதிப்பிலான 39 மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து விராஜ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story