'ஹர் கர் திரங்கா' இயக்கத்திற்காக பெங்களூருவில் இதுவரை 6 லட்சம் தேசிய கொடிகள் வினியோகம்-மாநகராட்சி தகவல்


ஹர் கர் திரங்கா இயக்கத்திற்காக பெங்களூருவில் இதுவரை 6 லட்சம் தேசிய கொடிகள் வினியோகம்-மாநகராட்சி தகவல்
x

‘ஹர் கர் திரங்கா' இயக்கத்திற்காக பெங்களூருவில் இதுவரை 6 லட்சம் தேசிய கொடிகள் வினியோகிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனர் ரங்கப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- 75-வது சுதந்திர தின பவள விழாவையொட்டி வருகிற 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை வீடுகள் மற்றும் கட்டிடங்கள் மீது தேசிய கொடி ஏற்றும் "ஹர் கர் திரங்கா" இயக்கம் நடைபெறுகிறது. இதற்காக பெங்களூரு மாநகராட்சி சார்பில் "ஹர் கர் திரங்கா" தேசிய கொடி இயக்கத்தை வெற்றி பெற வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி வார்டு அலுவலகங்கள், மண்டல கமிஷனர் அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்களில் தேசிய கொடி விற்பனை கவுண்ட்டரை திறக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

பெங்களூரு மாநகராட்சியில் இதுவரை 6 லட்சம் தேசிய கொடிகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. இன்று (நேற்று) இன்னும் 4 லட்சம் தேசிய கொடிகள் வருகின்றன. அந்த கொடிகள் மண்டலம் வாரியாக ஒதுக்கப்படும். ஒவ்வொரு வீட்டின் கட்டிடம் மீதும் தேசிய கொடி ஏற்றி தேசபக்தியை வெளிப்படுத்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு ரங்கப்பா கூறினார்.


Next Story