ஆஸ்பத்திரியில் இருந்து சோனியா காந்தி வீடு திரும்பினார்


ஆஸ்பத்திரியில் இருந்து சோனியா காந்தி வீடு திரும்பினார்
x

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடந்த 2-ந்தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடந்த 2-ந்தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.அதைத்தொடர்ந்து கடந்த 12-ந்தேதி டெல்லி கங்கா ராம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சை முடிந்து ஆஸ்பத்திரியில் இருந்து மாலை சோனியா காந்தி 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார்.

வீடு திரும்பிய அவரை ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.


Next Story