இன்றுடன் இந்தியா முழுவதும் வெப்ப அலை ஓய்ந்தது! கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு


இன்றுடன் இந்தியா முழுவதும் வெப்ப அலை ஓய்ந்தது!  கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
x

இந்தியா முழுவதும் வெப்ப அலை இன்றோடு முடிவடைகிறது. இன்றிலிருந்து வெப்பநிலை மெல்ல மெல்ல குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மே மாதம் பற்றி தனியாகச் சொல்ல வேண்டியது இல்லை. இந்த மாதம் வெப்பம் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதீத வெப்பத்தால் மதிய நேரங்களில் வெளியே செல்லவே தயங்கும் சூழலே இருந்து வருகிறது. தற்போது ஒரு ஆறுதல் விஷயமாக இந்தியா முழுவதும் வெப்ப அலை இன்றோடு முடிவடைகிறது. இன்றிலிருந்து வெப்பநிலை மெல்ல மெல்ல குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 24-ம் தேதி கேரளாவில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, உத்தரப்பிரதேசம், அரியானா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்பு உள்ள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 மாநிலங்களில் மலைப்பகுதியை ஒட்டிய இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story