சட்டம் குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாம்


சட்டம் குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாம்
x

சட்டம் குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாமை மங்களூரு கோர்ட்டு நீதிபதி பிரதீபா தொடங்கி வைத்தார்.

மங்களூரு:-

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு படீல் பகுதியில் சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் மங்களூரு சிவில் மற்றும் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு முதல் வகுப்பு கோர்ட்டு முதன்மை நீதிபதி பிரதீபா கலந்து கொண்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

சட்டம் என்பது கடல் போன்றது. புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதும், ஏற்கனவே உள்ள சட்டங்களை திருத்துவதும் தொடர்ச்சியான செயல்முறையாகும். சட்டத்தை அறிந்து கொண்டு விழிப்புணர்வு உள்ள குடிமக்களாக நாம் மாற வேண்டும். நூற்றுக்கணக்கான புதிய சட்டங்கள் இயற்றப்படும். அனைத்து சட்டங்கள் குறித்தும் நாம் தெரிந்துகொள்ள இயலாது. ஆனாலும் பொது சட்டத்தை நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அனைவருக்கும் கல்வி மற்றும் சுகாதாரம் தேவை. சட்ட உதவி தேவைப்படுபவர்கள் தட்சிண கன்னடா மாவட்ட சட்ட சேவை ஆணையத்தை தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story