டெல்லியில் இருந்து துபாய் சென்ற விமானம் கராச்சியில் அவசரமாக தரையிறக்கம்
டெல்லியில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் பாகிஸ்தானில் தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கராச்சி,
டெல்லியில் இருந்து துபாய் சென்ற ஸ்பைஸ்ஜெட்எஸ்ஜி-11 விமானம் தொழில்நுட்பக் கோளாறால் கராச்சியில் (பாகிஸ்தான்) அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். தொழில்நுட்ப கோளாறால் கராச்சியில் விமானம் தரை இறங்கிய நிலையில் பயணிகள் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், விமானம் அவசரமாக தரையிறக்கப்படவில்லை. விமானம் சாதாரணமாகத்தான் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் கோளாறு ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. பயணிகளுக்கு குளிர்பானம் வழங்கப்பட்டது. பயணிகளை துபாய்க்கு அழைத்துச் செல்லும் மாற்று விமானம் கராச்சிக்கு அனுப்பப்படுள்ளதாக ஸ்பைஸ்ஜெட் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story