எஸ்.எஸ்.எல்.சி. மாணவி பாலியல் பலாத்காரம்; 'போக்சோ'வில் சிறுவன் கைது


எஸ்.எஸ்.எல்.சி. மாணவி பாலியல் பலாத்காரம்; போக்சோவில் சிறுவன் கைது
x
தினத்தந்தி 10 Dec 2022 12:15 AM IST (Updated: 10 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கத்தால் எஸ்.எஸ்.எல்.சி. மாணவியை பலாத்காரம் செய்த சிறுவனை போலீசார் ‘போக்சோ’வில் கைது செய்துள்ளனர்.

மங்களூரு:

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்

தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வாலை சேர்ந்தவள் 14 வயது சிறுமி. இவள் அந்தப்பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். இந்த சிறுமி, அங்குள்ள தனியார் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வருகிறாள். இந்த நிலையில் சிறுமிக்கும், அதேப்பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவனுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

இதனால் அவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் தினமும் பேசி பழகி வந்துள்ளனர். சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த சிறுவன் அடிக்கடி அவளது வீட்டுக்கு வந்து சென்றுள்ளான்.

பாலியல் பலாத்காரம்

இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி இரவு சிறுமியை, அந்த சிறுவன் ஸ்கூட்டரில் ெவளியே அழைத்து சென்றுள்ளான். பின்னர் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து ஸ்கூட்டரை நிறுத்திய அந்த சிறுவன், சிறுமியை மறைவான இடத்துக்கு அழைத்து சென்று அங்கு வைத்து அவளை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. மேலும் இதுபற்றி வெளியே யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளான்.

ஆனாலும், அந்த சிறுமி நடந்த சம்பவம் பற்றி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளாள். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுகுறித்து பண்ட்வால் போலீசில் புகார் அளித்தனர்.

சிறுவன் கைது

அதன்பேரில் பண்ட்வால் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர். பின்னர் அவனை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி, சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள்.


Next Story