மாநில சட்ட அமைச்சர்கள் மாநாடு குஜராத்தில் இன்று தொடக்கம்- காணொலி மூலம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி


மாநில சட்ட அமைச்சர்கள் மாநாடு குஜராத்தில் இன்று தொடக்கம்- காணொலி மூலம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
x

மத்திய மாநில அரசுகளிடையே பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்த இந்த மாநாடு வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத்,

அகில இந்திய சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலாளர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் இன்று தொடங்குகிறது. மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்களது நடைமுறைகளை பகிர்ந்து கொள்ளவும், புதிய யோசனைகளை தெரிவிக்கவும், இதன் மூலம் மத்திய மாநில அரசுகளிடையே பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்தவும், இந்த மாநாடு வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ள மாநாட்டின் தொடக்க அமர்வில், பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்ற உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


Next Story