கர்நாடகத்தில் 6 இடங்களில் அரசின் சாதனை விளக்க மாநாடு- முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி


கர்நாடகத்தில் 6 இடங்களில் அரசின் சாதனை விளக்க மாநாடு-  முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
x

கர்நாடகத்தில், 6 இடங்களில் அரசின் சாதனை விளக்க மாநாடு நடத்த முடிவு செய்துள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

பெங்களூரு: கர்நாடகத்தில், 6 இடங்களில் அரசின் சாதனை விளக்க மாநாடு நடத்த முடிவு செய்துள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

விரிவாக ஆலோசனை

முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சந்தித்து பேசினார். அந்த சந்திப்புக்கு பிறகு பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் பா.ஜனதாவை பலப்படுத்தும் நோக்கத்தில் எடியூரப்பா டெல்லி சென்று தலைவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்திவிட்டு வந்துள்ளார். அங்கு நடைபெற்ற ஆலோசனைகள் குறித்து நாங்கள் விரிவாக ஆலோசனை நடத்தினோம். நமது பிரதமர் மோடி வருகிற 2-ந் தேதி மங்களூரு வருகிறார். அவரது வருகையின்போது, கட்சி சார்பில் ஏற்பாடு செய்ய வேண்டிய நிகழ்ச்சிகள் குறித்து விவாதித்தோம்.

சாதனை விளக்க மாநாடு

எடியூரப்பா, நளின்குமார் கட்டீல், அருண்சிங் ஆகியோர் தனித்தனி குழுவாக பிரிந்து சென்று மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளோம். மாநிலத்தில் 6 இடங்களில் சாதனை விளக்க மாநாடு நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த மாநாடுகள் வருகிற செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறும். இதுகுறித்து இறுதி முடிவு எடுக்க மாநில அளவிலான கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. வருகிற 8-ந் தேதி தொட்டபள்ளாபுராவில் அரசின் சாதனை விளக்க மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை வெற்றிகரமாக மேற்கொள்வது குறித்து சில ஆலோசனைகளை எடியூரப்பா வழங்கியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story