ஜம்மு காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜெய்ராம் ரமேஷ்


ஜம்மு காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜெய்ராம் ரமேஷ்
x

ஜம்மு காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து அளிக்க வேண்டியது அவசியம் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

ஜம்முகாஷ்மீர்,

ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளா்கள் சந்திப்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-

ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் திரும்ப பேரவைத் தோ்தல் நடத்த முதலில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா். அடுத்ததாக ஜம்மு காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இங்கு நிலம் மற்றும் வேலைவாய்ப்புகளில் பிரச்னை உள்ளது. அதற்கு சட்ட ரீதியாக தீா்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கு ஜம்மு காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து அளிக்க வேண்டியது அவசியம். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் இதுவரை 75 மாவட்டங்களைக் கடந்துள்ளது. தினசரி 23 முதல் 24 கி.மீ. தூரம் சராசரியாக ராகுல் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளாா்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story