குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்
கோலாாில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது
கோலார் தங்கவயல்;
கோலார் தாலுகா சுகட்டூர் அருகே மஜ்ரா தின்னூர் கிராமத்தில் 17 மைனர் பெண்ணுக்கும், அதேப்பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் இருவீட்டாரும் திருமணம் செய்து வைக்க பேசி முடிவு செய்திருந்தனர்.
அவர்களின் திருமணம் நேற்று நடக்க இருந்தது. இந்த நிலையில் குழந்தை திருமணம் நடப்பது குறித்து குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது 17 வயது மைனர்பெண்ணுக்கு குழந்தை திருமணம் நடக்க இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், இருவீட்டாரையும் அழைத்து எச்சரிக்கை விடுத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story