திரவுபதி முர்முவின் பழங்குடியின பின்னணியை முன்னிலைப்படுத்துவதா? பா.ஜனதாவுக்கு காங்கிரஸ் கண்டனம்
ஜனாதிபதி தேர்தல், 2 நபர்களுக்கு இடையிலான போட்டி அல்ல. 2 சித்தாந்தங்களுக்கு இடையிலான போட்டி என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கவுரவ் கோகாய் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பா.ஜனதா தனது ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் திரவுபதி முர்முவின் பழங்குடியின பின்னணியை முன்னிலைப்படுத்துகிறது. ஜனாதிபதி பதவி என்பது அனைத்து பிரிவினரின் உணர்வுகளையும், பன்முகத்தன்மையையும் பிரதிபலிக்கக்கூடியது.
ஜனாதிபதி பதவியின் கண்ணியத்தை விட பழங்குடியின பின்னணியை மட்டும் முன்னிலைப்படுத்துவதுதான் பா.ஜனதாவின் அரசியல் நோக்கம் என்றால், அவர்கள் அதுபற்றி சிந்திக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தல், 2 நபர்களுக்கு இடையிலான போட்டி அல்ல. 2 சித்தாந்தங்களுக்கு இடையிலான போட்டி"இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story