மதுபானம் பதுக்கி வைத்து விற்பனை; 19 பேர் கைது


மதுபானம் பதுக்கி வைத்து விற்பனை; 19 பேர் கைது
x
தினத்தந்தி 31 Oct 2022 12:15 AM IST (Updated: 31 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோலாரில் மதுபானம் பதுக்கி வைத்து விற்பனை செய்த 19 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோலார் தங்கவயல்:

கோாலார் மாவட்டத்தில் வீடுகள் மற்றும் மதுபானக்கடைகளில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக கலால்த்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட கலால்த்துறை துணை இயக்குனர் அருணா, மற்றும் இணை இயக்குனர் ரவீந்திரா ஆகியோர் கோலார் நகர் பகுதி முழுவதும் சோதனை நடத்தினர். அப்போது சட்டவிரோதமாக மதுபானம் விற்பனையில் மற்றும் பதுக்களில் ஈடுபட்டதாக 19 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் 60 லிட்டர் மதுபானம் மற்றும் 11,700 லிட்டர் பீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து கைதான 19 பேர் மீது கலால்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story