ஏரி சேற்றில் சிக்கி 2 வாலிபர்கள் சாவு


ஏரி சேற்றில் சிக்கி   2 வாலிபர்கள் சாவு
x

ஏரி சேற்றில் சிக்கி 2 வாலிபர்கள் பலியானார்கள்.

பெங்களூரு: கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டம் அரப்பனஹள்ளி தாலுகா தெலகி கிராமத்தை சேர்ந்தவர்கள் அமர்(வயது 19), சந்துரு(19). இவர்கள் 2 பேரும் நேற்று தெலகி கிராமத்தில் உள்ள ஏாியில் குளித்து கொண்டு இருந்தனர். அப்போது ஏரியில் உள்ள சேற்றில் 2 பேரும் சிக்கி கொண்டனர்.

இதனால் 2 பேராலும் நீச்சல் அடித்து வெளியே வர முடியவில்லை. சிறிது நேரத்தில் 2 பேரும் ஏரியில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதுபற்றி அறிந்ததும் அரப்பனஹள்ளி போலீசார், தீயணைப்பு படையினர் அங்கு சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து அரப்பனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


Next Story