காதலியுடன் நெருங்கி பழகிய ஆத்திரத்தில் மாணவர் படுகொலை; கல்லூரி மாணவர் வெறிச்செயல்


காதலியுடன் நெருங்கி பழகிய ஆத்திரத்தில் மாணவர் படுகொலை; கல்லூரி மாணவர் வெறிச்செயல்
x

தெலுங்கானாவில் தனது காதலியுடன் நெருங்கி பழகிய ஆத்திரத்தில் மாணவரை கல்லூரி மாணவர் ஒருவர் படுகொலை செய்து உள்ளார்.



ஐதராபாத்,

தெலுங்கானாவில் நலகொண்டா நகரில் மகாத்மா காந்தி பல்கலை கழகத்தில் படித்து வந்தவர் நவீன். பொதுப்பல் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் இறுதி ஆண்டு படித்து வந்தவர் ஹரஹர கிருஷ்ணா.

இந்நிலையில், கிருஷ்ணாவின் காதலியுடன் நவீன் நெருங்கி பழகியுள்ளார் என கூறப்படுகிறது. இதனால், கிருஷ்ணாவுக்கு ஆத்திரம் ஏற்பட்டு உள்ளது. நவீனை ஒழித்து கட்ட முடிவு செய்து உள்ளார்.

இதன்படி, நவீனை அழைத்து வெளிவட்ட சாலையில் உள்ள புதர் பகுதிக்கு அழைத்து சென்று மோதலில் ஈடுபட்டு உள்ளார். இந்த சண்டையில், நவீன் கீழே விழுந்து உள்ளார். அதன்பின் நவீனின் கழுத்தில் கால் வைத்து, மிதித்து கொலை செய்து உள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அவர் கத்தி ஒன்றையும் வாங்கி வைத்து உள்ளார் என கூறப்படுகிறது.

எனினும், அதன்பின்னர் வழக்கம்போல் காணப்பட்டு உள்ளார். நவீனை காணாமல் அவரது பெற்றோர் புகார் அளித்து உள்ளனர். இதுபற்றி நவீனின் நெருங்கிய நண்பர்களிடம் விசாரித்ததில், கடைசியாக ஹரஹர கிருஷ்ணாவை பார்க்க சென்ற விவரம் தெரிய வந்தது.

அவரிடம் விசாரித்தபோது, சம்பவத்தன்று நவீன் பல்கலை கழகத்திற்கு படிக்க சென்று விட்டார் என கூறியுள்ளார். சந்தேகமடைந்த போலீசார் கிருஷ்ணாவை பிடித்து சென்று தீவிர விசாரணை நடத்தியதில் அவர் உண்மையை ஒப்பு கொண்டு உள்ளார். நவீனின் உடல் மீட்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story