அரசு பள்ளி வளாகத்தில் மாணவன் தற்கொலை


அரசு பள்ளி வளாகத்தில் மாணவன் தற்கொலை
x

ராய்ச்சூரில், அரசு பள்ளி வளாகத்தில் மாணவன் தற்கொலை செய்துகொண்டான்.

ராய்ச்சூர்:

ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகுர் தாலுகா அன்வரி கிராமத்தில் வசிக்கும் தம்பதியின் மகன் கங்கண்ணா (வயது 14). இந்த சிறுவன், ராய்ச்சூர் மாவட்டம் மான்வி தாலுகா கவிதாலா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மல்லதகுட்டே கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். அதே கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் கங்கண்ணா தங்கி இருந்து பள்ளிக்கு சென்று வந்தான். நேற்று காலையில் அவன் வழக்கம் போல் பள்ளிக்கு புறப்பட்டு சென்றான்.

ஆனால் அவன் தனியார் பள்ளிக்கு செல்லாமல், கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கு சென்று, அங்குள்ள வளாகத்தில் இருக்கும் கம்பியில் தூக்குப்போட்டு கங்கண்ணா தற்கொகலை செய்து கொண்டான். இதுகுறித்து கவிதாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story