பங்காருப்பேட்டையில் விடுதி முன்பு மாணவர்கள் போராட்டம்


பங்காருப்பேட்டையில் விடுதி முன்பு மாணவர்கள் போராட்டம்
x

பங்காருபேட்டையில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததால் விடுதி முன்பு மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

கோலார் தங்கவயல்:

கோலார் மாவட்டம் பங்காருபேட்டை தாலுகா பாரண்டஹள்ளி அருகே சமூக நலத்துறைக்கு சொந்தமான மாணவர்கள் விடுதி அமைந்துள்ளது. இங்கு எந்த அடிப்படை வசதிகளும் இல்லை என தெரிகிறது. மேலும், உணவும் தரமானதாக இல்லை என தெரிகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக நலத்துறை அதிகாரி கல்லேஷ் மற்றும் தாசில்தார் தயானந்த் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும், தரமான உணவு வழங்க வேண்டும் என்றும் சமூக நலத்துறை அதிகாரி கல்லேஷ் உத்தரவிட்டிருந்தார். ஆனால் தற்போது வரை அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனை கண்டித்து விடுதி முன்பு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து மாவட்ட சமூக நலத்துறை இணை இயக்குனர் கல்லேஷ், பங்காருபேட்டை தாசில்தார் தயானந்த் ஆகியோர் விரைந்து வந்து போராட்டம் நடத்திய மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டதாக கூறப்படுகிறது.


Next Story