டெல்லியில் சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை... நண்பரின் தோட்டா உயிரை பறித்தது


டெல்லியில் சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை... நண்பரின் தோட்டா உயிரை பறித்தது
x

போதையில் இருந்த அவர் திடீரென துப்பாக்கியை இயக்கியபோது தோட்டா சந்தீப்குமாரை தாக்கியது தெரியவந்தது.

புதுடெல்லி,

துணை ராணுவமான எல்லை பாதுகாப்பு படையில் (பி.எஸ்.எப்.) சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் சந்தீப்குமார். இவர் டெல்லியின் நஜாப்கர் பகுதியில் நேற்று முன்தினம் இரவில் காரில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் கிடந்தார். அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

போலீசார் விசாரணையில், 'சந்தீப்குமார் தனது மைத்துனர் அங்குஸ் மற்றும் மருமகன் ரவி ஆகியோருடன் சம்பவத்தன்று காரில் சென்று கொண்டிருந்தார். சந்தீபின் நண்பரான டிரைவர் சந்தீப் சேவாக் காரை ஓட்டிச் சென்றார். சேவாக் தோட்டா நிரப்பப்பட்ட கைதுப்பாக்கியை தன்வசம் வைத்திருந்தார். போதையில் இருந்த அவர் திடீரென துப்பாக்கியை இயக்கியபோது தோட்டா சந்தீப்குமாரை தாக்கியது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிரைவர் சேவாக்கை கைது செய்தனர். எதிர்பாராதவிதமாக துப்பாக்கி வெடித்ததா, அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விரசாணை நடத்தி வருகிறார்கள்.


Next Story