கர்நாடகா மெட்ரோ ரெயில் திட்ட பணியின்போது சாலையில் திடீர் பள்ளம்; மக்கள் அதிர்ச்சி


கர்நாடகா மெட்ரோ ரெயில் திட்ட பணியின்போது சாலையில் திடீர் பள்ளம்; மக்கள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 12 Jan 2023 3:02 PM IST (Updated: 12 Jan 2023 3:04 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் மெட்ரோ ரெயில் திட்ட பணியில் தூண் சரிந்து தாய்-மகன் உயிரிழந்த அதிர்ச்சி மறைவதற்குள் சாலையில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டு அதிர்ச்சி அடைய செய்துள்ளது.



பெங்களூரு,


கர்நாடகாவில் பெங்களூரு நகரில் நம்ம மெட்ரோ என்ற பெயரிலான மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதனை தொடர்ந்து, அசோக் நகர் பகுதியில் சாலையில் இன்று வழக்கம்போல் பணிகள் நடந்து கொண்டிருந்தன.

இதில், திடீரென பெரிய அளவில் சாலையின் நடுவில் பள்ளம் ஒன்று ஏற்பட்டது. இதனை கவனித்த அதிகாரிகள் அந்த பகுதியை சுற்றி வேலி அமைத்து பாதிப்பு ஏற்படாத வகையில் வளையம் அமைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவில் பெங்களூரு நகரின் நாகவரா பகுதியில் கடந்த இரு நாட்களுக்கு முன் மெட்ரோ ரெயில் பணி நடந்தபோது, கல்யாண் நகரில் இருந்து எச்.ஆர்.பி.ஆர். பகுதி வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் மேம்பாலத்துக்காக தூண்கள் அமைக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், நாகவரா பகுதியில் நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் மெட்ரோ ரெயில் பாதைக்கான தூண் ஒன்று திடீரென இடிந்து, சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 3 பேர் மீது விழுந்தது.

இதனால், கணவன்-மனைவி, அவர்களது 2 வயது மகன் ஆகியோர் படுகாயமடைந்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி தாய் மற்றும் 2 வயது மகன் உயிரிழந்தது சோகம் ஏற்படுத்தி உள்ளது.

இந்த விபத்து சம்பவம் பற்றி கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி.கே. சிவகுமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, 40% கமிஷன் அரசின் விளைவு இது. வளர்ச்சி பணிகளில் எந்தவித தரம் சார்ந்த விசயமும் இல்லை என குற்றச்சாட்டாக கூறினார்.

இந்நிலையில், நம்ம மெட்ரோ ரெயில் திட்ட பணியின்போது சாலையில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டு இருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.


Next Story