பத்ரா ஆற்றில் குதித்து விவசாயி தற்கொலை


பத்ரா ஆற்றில் குதித்து விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 19 Dec 2022 12:15 AM IST (Updated: 19 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

என்.ஆர்.புராவில் பத்ரா ஆற்றில் குதித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

சிக்கமகளூரு:

சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா கடலேமக்கி கிராமத்தை சேர்ந்தவர் ரெவல் மிலிட்டர் (வயது 42). விவசாயி. இவர் கடன் தொல்லை மற்றும் வாழ்க்கையில் விரக்தி அடைந்து காணப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர், மெனசூர் கிராமத்தில் ஓடும் பத்ரா ஆற்றுப்பகுதிக்கு சென்று ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதனை பார்த்த அந்தப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக என்.ஆர்.புரா போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் ஆற்றில் கிடந்த அவருடைய உடலை கைப்பற்றினர். பின்னர் போலீசார் அவரது உடைல மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து என்.ஆர்.புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story