தூக்க மாத்திரைகள் தின்று மாணவர் தற்கொலை முயற்சி


தூக்க மாத்திரைகள் தின்று மாணவர் தற்கொலை முயற்சி
x

காதலியை காப்பகத்தில் சேர்த்ததால் மனமுடைந்து தூக்க மாத்திரைகள் தின்று மாணவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.

பெங்களூரு:

பெங்களூரு சாம்ராஜ்பேட்டை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ஹர்ஷத்(வயது 19). இவர், கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இந்த நிலையில், அதே கல்லூரியில் படிக்கும் மாணவியை காதலித்துள்ளார். இதுபற்றி மாணவியின் பெற்றோருக்கு கடந்த சில மாதத்திற்கு முன்பு தெரியவந்தது. உடனே அவர்கள், தங்களது மகளை கண்டித்துள்ளனர். மேலும் ஞானபாரதி போலீஸ் நிலையத்தில் ஹர்ஷத் மீது புகாரும் அளித்தனர். அப்போது மாணவியிடம் விசாரித்த போது, பெற்றோருடன் செல்ல மறுத்து, காதலனுடன் செல்வதாக மாணவி கூறி இருந்தார்.


இதையடுத்து, காதலன் வீட்டிலேயே ஒரு மாதம் மாணவி தங்கி இருந்தார். இதுபற்றி சாம்ராஜ்பேட்டை போலீஸ் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் மீண்டும் புகார் அளித்தனர். அப்போதும் காதலனுடன் தான் வாழ்வேன் என்று மாணவி கூறினார். ஆனால் மாணவியை, பெற்றோருடனும், காதலனுடனும் அனுப்பாமல், பெண்கள் பாதுகாப்பு மையத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தார்கள். இதன் காரணமாக மனம் உடைந்த ஹர்ஷத் நேற்று முன்தினம் இரவு தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சாம்ராஜ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story