காணொலி காட்சி தொழில்நுட்ப கோளாறு எதிரொலி; பெண் மனுதாரரின் வழக்கை செல்போனில் விசாரித்த நீதிபதிகள்


காணொலி காட்சி தொழில்நுட்ப கோளாறு எதிரொலி; பெண் மனுதாரரின் வழக்கை செல்போனில் விசாரித்த நீதிபதிகள்
x

மனுதாரரிடம் செல்போனிலேயே நீதிபதிகள் வாதங்களை கேட்ட அரிய சம்பவம் சுப்ரீம் கோர்ட்டில் கவனத்தை ஈர்த்தது.

புதுடெல்லி,

கொரோனாவுக்குப்பின் சுப்ரீம் கோர்ட்டில் நேரடியாகவும், காணொலி காட்சி வாயிலாகவும் வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. இதில் மனுதாரர்கள் மற்றும் வக்கீல்கள் எந்த முறையையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த நிலையில் இன்சூரன்ஸ் ஊழியர்களின் இடஒதுக்கீட்டில் தனது மகளுக்கு 2018-19-ம் ஆண்டில் எம்.பி.பி.எஸ். சீட் மறுக்கப்பட்டதாக பெண் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் நேற்று காணொலி காட்சி மூலம் வாதாடினார்.

ஆனால் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், மனுதாரரின் வாதங்கள் நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஹிமா கோலி அமர்வுக்கு கேட்கவில்லை. இதைத்தொடர்ந்து அவரது செல்போன் எண்ணை கேட்டு வாங்கி நீதிபதிகள் செல்போனிலேயே அவரது வாதங்களை கேட்டனர்.

பின்னர் அவரது மகள் நீட் தேர்வு எழுதவில்லை என்பதை அறிந்த நீதிபதிகள், அடுத்த முறை தேர்வு எழுத அறிவுறுத்தியதுடன், மீண்டும் அவருக்கு சட்ட விரோதமாக சீட் மறுக்கப்பட்டால் கோட்டை அணுகுமாறு கூறி வழக்கை முடித்து வைத்தனர். மனுதாரரிடம் செல்போனிலேயே நீதிபதிகள் வாதங்களை கேட்ட இந்த அரிய சம்பவம் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று கவனத்தை ஈர்த்தது.


Next Story