புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் திறக்கப்பட்ட தேசிய சின்னத்துக்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி


புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் திறக்கப்பட்ட தேசிய சின்னத்துக்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
x

புதுடெல்லி,

டெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தேசிய சின்னமான நான்முக சிங்கத்தின் சிலையை பிரதமர் மோடி சமீபத்தில் திறந்து வைத்தார்.

இந்த சின்னத்தின் வடிவமைப்பு தேசிய சட்டவிதிகளுக்கு எதிராக அமைந்துள்ளதாகவும், சாரநாத் அருங்காட்சியகத்தில் உள்ள சிலைக்கு முற்றிலும் எதிராக இருப்பதாகவும் கூறி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வக்கீல்கள் அல்தானிஷ் ரெய்ன், ரமேஷ்குமார் மிஸ்ரா ஆகியோர் தாக்கல் செய்த இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு விசாரித்தது.

விசாரணையின்போது மனுதாரர்களின் குற்றச்சாட்டை ஏற்க மறுத்த நீதிபதிகள், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் திறக்கப்பட்ட நான்முக சிங்க தேசிய சின்னம் சட்ட விதிகளுக்கு எதிராக இல்லை எனக்கூறினர்.

பின்னர் இந்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


Next Story