மதம் மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு: மத்திய அரசின் ஆணையத்துக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
மதம் மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு தொடர்பான மத்திய அரசின் ஆணையத்துக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
புதுடெல்லி,
இந்து மதத்தில் இருந்து மாற்று மதத்துக்கு மாறிய பட்டியல் இனத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் மத்திய அரசு ஆணையம் அமைத்துள்ளது.
இதை எதிர்த்து புனேவை சேர்ந்த பிரதாப் பாபுராவ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.கே.கவுல், அபஸ் எஸ்.ஒகா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.
அப்போது மனுதாரர் சார்பில் பிராங்க்ளின் தாமஸ் ஆஜராகி, 'இந்த விவகாரம் தொடர்பான மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளபோது, மத்திய அரசு ஆணையத்தை அமைத்திருப்பது ஏற்புடைதல்ல' என வாதிட்டார்.
இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என தெரிவித்து அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்
Related Tags :
Next Story