மக்கள் நல பணியாளர் வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல்


மக்கள் நல பணியாளர் வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல்
x

மக்கள் நலப் பணியாளர்கள் தொடர்புடைய வழக்கை வருகிற 15-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தது.

புதுடெல்லி,

மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது தொடர்பாக, விழுப்புரம் மாவட்ட மக்கள் நலப் பணியாளர்கள் மறுவாழ்வு சங்க மாநில தலைவர் விழுப்புரம் ஆர்.தனராஜ் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த இடைக்கால மனுவை அவசரமாக விசாரிக்க கோரி வக்கீல் ரகுநாத சேதுபதி, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் முறையிட்டார். முறையீட்டை பரிசீலித்த சுப்ரீம் கோர்ட்டு, மக்கள் நலப் பணியாளர்கள் தொடர்புடைய வழக்கை வருகிற 15-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தது. மக்கள் நலப் பணியாளர்களை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கும் தமிழக அரசின் முன்மொழிவிற்கு கடந்த ஜூன் 8-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு தடை விதிக்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.


Next Story