பொதுப்பதவியில் இருப்பவர்கள் பிறரை புண்படுத்தும் வகையில் பேசக்கூடாது சுப்ரீம் கோர்ட்டு கருத்து
பொதுப் பதவியில் இருப்பவர்கள் பிறரை புண்படுத்தும் வகையில் மரியாதையில்லாமல் பேசக்கூடாது என்பது அரசமைப்பு சாசனத்தின் எழுதப்படாத விதி.
புதுடெல்லி,
மந்திரிகள், பொதுப் பதவியில் இருப்பவர்கள் பிறரை இழிவுபடுத்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிப்பதை தடுக்கும்வகையில் கூடுதல் வழிகாட்டுதல்களை உருவாக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அந்த மனுக்களை நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அரசியல்சாசன அமர்வு விசாரித்தது.
நேற்றைய விசாரணையின்போது, பொதுப் பதவியில் இருப்பவர்கள் பிறரை புண்படுத்தும் வகையில் மரியாதையில்லாமல் பேசக்கூடாது என்பது அரசமைப்பு சாசனத்தின் எழுதப்படாத விதி. மேலும் அரசமைப்பு சாசனத்தின் பண்பாட்டின் ஒரு பகுதியும்கூட. பொதுப் பதவியில் இருப்பவர்கள் கட்டுப்பாடுடன் நடக்க வேண்டும். இந்த நற்பண்பை சமூக, அரசியல்தளத்தில் வளர்க்க வேண்டும் என கருத்து தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.
Related Tags :
Next Story