தேர்தல் நிதி பத்திர திட்டத்துக்கு தடை கோரிய மனு; சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை


தேர்தல் நிதி பத்திர திட்டத்துக்கு தடை கோரிய மனு; சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
x

தேர்தல் நிதி பத்திர திட்டத்துக்கு தடை கோரிய மனு சுப்ரீம் கோர்ட் இன்று விசாரிக்கிறது.

தேர்தல் நிதி பத்திரம் மூலம் நன்கொடை அளிக்கும் திட்டத்துக்கு தடை கோரி ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு சார்பில் வக்கீல் பிரசாந்த் பூஷண், தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் கடந்த ஏப்ரல் 5-ந்தேதி ஆஜரானார். அப்போது, தேர்தல் நிதி பத்திரம் மூலம் நன்கொடை அளிக்கும் திட்டத்துக்கு தடை கோரிய மனுக்கள் ஓராண்டுக்கு மேலாக விசாரிக்கப்படாமல் உள்ளன. சுங்கவரி துறையினரின் சோதனையை தவிர்க்கும் வகையில் ரூ.40 கோடியை தேர்தல் நிதி பத்திரத்தின் வாயிலாக பெறப்பட்டுள்ளது. இது மக்களாட்சியை சிதைக்கும் வகையில் உள்ளது. எனவே, இந்த விவகாரத்தை உடனடியாக விசாரிக்க வேண்டும் என வாதிட்டார்.

முறையீட்டை பரிசீலித்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, விரைந்து விசாரிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தேர்தல் நிதி பத்திரம் மூலம் நன்கொடை அளிக்கும் திட்டத்துக்கு தடை கோரிய மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரிக்கிறது


Next Story