ஓய்வு எடுத்து கொள்ளுங்கள் பிரதமர் அவர்களே...! எப்படி ஆறுதல் கூறுவது என தெரியவில்லை - மம்தா பானர்ஜி உருக்கமான வேண்டுகோள்...!


ஓய்வு எடுத்து கொள்ளுங்கள் பிரதமர் அவர்களே...! எப்படி ஆறுதல் கூறுவது என தெரியவில்லை - மம்தா பானர்ஜி உருக்கமான வேண்டுகோள்...!
x

மேற்கு வங்காளத்தில் நடந்த வந்தே பாரத் ரெயில் துவக்க விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடியிடம்,'' உங்கள் தாயாரும் எங்களுக்கும் தாயார் தான். தயவு செய்து ஓய்வு எடுத்து கொள்ளுங்கள்'' என மம்தா பானர்ஜி கூறினார்.

காந்திநகர்,

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று அதிகாலை உயிரிழந்தார். தாயார் மறைவு செய்தி கேட்டதும் உடனடியாக குஜராத் சென்ற பிரதமர் மோடி, தனது தயார் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நடைபெற்றது. இதையடுத்து காந்திநகரில் உள்ள மயானத்தில் பிரதமர் மோடியின் தாயார் உடல் தகனம் செய்யப்பட்டது. தாயின் சிதைக்கு பிரதமர் மோடி தீ மூட்டினார்.

தாயாரின் இறுதிச்சடங்குகளை முடித்த பிறகு, மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மற்றும் நியூ ஜல்பைகுரி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை துவக்க விழாவில் வீடியோ கான்பரன்சிங் மூலமாக பிரதமர் மோடி பங்கேற்று ரெயில் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

விழாவில் மம்தா பானர்ஜி பேசுகையில்,

உங்கள் தாயாரின் மறைவுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என தெரியவில்லை. உங்களின் தாயார் எங்களுக்கும் தாயார் தான். இந்த நேரத்தில் எனது தாயாரை நினைத்து பார்க்கிறேன்.

தொடர்ந்து பணியாற்ற கடவுள் உங்களுக்கு நல்ல பலத்தை கொடுக்க வேண்டும். தயவு செய்து கொஞ்சம் ஓய்வு எடுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

மம்தாவின் பேச்சு பிரதமர் மோடியின் கடமை உணர்வை பாராட்டுவதாகவே இருந்தது.

ரெயில் சேவை துவக்க விழாவில், பாஜக தொண்டர்கள் '' ஜெய் ஸ்ரீராம்'' என கோஷம் போட்டனர். இதனால், அதிருப்தி அடைந்த மம்தா பானர்ஜி மேடையில் ஏற மறுத்து விட்டார். ரெயில் நிலையத்தின் நடைமேடையிலேயே நின்றார். மத்திய மந்திரிகள் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் சுபாஷ் சர்கார் ஆகியோர், மம்தாவை சமாதானபடுத்தி மேடையில் ஏறும்படி வலியுறுத்தினார். ஆனால், மம்தாபானர்ஜி மேடையில் ஏற மறுத்துவிட்டார். இதனை தொடர்ந்து, பாஜக தொண்டர்களை அமைதிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.


Next Story