தமிழக தொழிலாளி கொலையில் கட்டிட என்ஜினீயர் கைது
தமிழக தொழிலாளி கொலையில் கட்டிட என்ஜினீயர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு: பெங்களூரு இட்டமடுவில் வசித்தவர் தங்கஅரசன் (வயது 34). தொழிலாளியான இவர், தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஆவார். சுப்பிரமணியபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சிக்கலசந்திராவில் புதிதாக அடுக்குமாடி கட்டிடம் கட்டப்படுகிறது. அங்கு தொழிலாளியாக தங்கஅரசன் வேலை செய்து வந்தாா்.
அடுக்குமாடி கட்டிடத்தில் கிடந்த 100 கிலோ இரும்பு கம்பிகளை திருடிவிட்டதாக கூறி தங்கஅரசனை, கடந்த மாதம் (ஜூலை) 29-ந் தேதி கட்டிட என்ஜினீயர் பார்கவ் உருட்டு கட்டையால் தாக்கி கொலை செய்திருந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த சுப்பிரமணியபுரா போலீசார், பனசங்கரியை சேர்ந்த கட்டிட என்ஜினீயர் பார்கவை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணைநடந்து வருகிறது.
Related Tags :
Next Story