குடும்ப பிரச்சினையை தீர்ப்பதாக கூறி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த போலிச்சாமியார்


குடும்ப பிரச்சினையை தீர்ப்பதாக கூறி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த போலிச்சாமியார்
x

குடும்ப பிரச்சினையை தீர்ப்பதாக போலிச்சாமியார் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்தூர்,

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த 38 வயதான பெண் தனக்கு குடும்ப பிரச்சினை இருப்பதாக சாமியார் ஒருவரிடம் கூறியுள்ளார். அந்த நபர் போலிச்சாமியார் என்பதை அறியாத அந்த பெண் தன் குடும்ப பிரச்சினை குறித்து கூறியுள்ளார்.

அப்போது, பிரச்சினையை தீர்க்க தன்னுடன் பாலியல் உறவில் இருக்க வேண்டும் என அந்த போலிச்சாமியார் கூறியுள்ளார். இதை நம்பிய அந்த பெணை போலிச்சாமியார் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பல முறை அந்த பெண்ணை போலிச்சாமியார் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பின்னர், இது குறித்து யாரிடமும் கூறக்கூடாது கூறினால் உன் கணவனையும், உன்னையும் கொலை செய்துவிடுவேன் என அந்த பெண்ணை போலிச்சாமியார் மிரட்டியுள்ளார். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் போலிச்சாமியாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story