இந்துக்கள் இடையே பிரிவினையை ஏற்படுத்த ராகுல் முயற்சி: பாஜக விமர்சனம்


இந்துக்கள் இடையே பிரிவினையை ஏற்படுத்த ராகுல்  முயற்சி: பாஜக விமர்சனம்
x

ராகுல் காந்தியின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ள பாஜக, இந்துக்களிடம் இடையே பிரிவினையை ஏற்படுத்த ராகுல் காந்தி முயற்சிப்பதாக சாடியுள்ளது.

புதுடெல்லி,

அரியானா மாநிலத்தில் நேற்று பாரத் ஜோடோ யாத்திரைக்கு இடையே ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். பாஜகவை கடுமையாக விமர்சித்தார். ராகுல் காந்தி கூறும் போது, ஒற்றுமை யாத்திரையின் முக்கியமான நோக்கம் இதுதான், இந்தியாவின் குரல் நசுக்கப்பட்டுவருகிறது. மக்களிடையே அச்சம் பரப்பப்பட்டு வருகிறது.

இந்தியாவை பிளவுபடுத்தும் வேலைகள் நடக்கின்றன. ஒரு சாதியை மற்றொருவருக்கு எதிராக திருப்புகிறார்கள். ஒரு மதத்தை மற்றொரு மதத்திற்கு எதிராக திருப்புகிறார்கள்" என்று விமர்சித்து இருந்தார்.இந்த நிலையில், ராகுல் காந்தியின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ள பாஜக, இந்துக்களிடம் இடையே பிரிவினையை ஏற்படுத்த ராகுல் காந்தி முயற்சிப்பதாக சாடியுள்ளது.


Next Story