ஒடிசாவில் 14 மாணவர்களை அடித்த ஆசிரியர் கைது; 4 பேர் மருத்துவமனையில் அனுமதி


ஒடிசாவில் 14 மாணவர்களை அடித்த ஆசிரியர் கைது; 4 பேர் மருத்துவமனையில் அனுமதி
x

ஒடிசாவில் கேள்விக்கு பதில் அளிக்காத 14 மாணவர்களை அடித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு உள்ளார்.



பத்ரக்,



ஒடிசாவின் பத்ரக் மாவட்டத்தில் சுனாமுஹின் பகுதியில் உள்ள பள்ளி கூடத்தில் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு கணித பாடம் பயிற்றுவிக்கும் ஆசிரியராக பணியாற்றி வருபவர் கல்பதரு மல்லிக். அவர் மாணவர்களிடம் கணக்கு பாடத்தில் வடிவியல் பற்றி கேள்வி கேட்டிருக்கிறார்.

அதற்கு மாணவர்கள் சிலர் சரியாக பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, ஆசிரியர் பதிலளிக்காத 14 மாணவர்களை அடித்திருக்கிறார். அவர்களில் 4 பேருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. பின்னர் அந்த மாணவர்கள் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றுள்ளனர்.

இதன்பின் தங்களது பெற்றோரிடம் ஆசிரியர் அடித்தது பற்றி மாணவர்கள் தெரிவித்து உள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த பெற்றோர் பள்ளி வளாகத்திற்கு படையெடுத்து சென்று, ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர். ஆனால், மாணவர்களை அந்த அளவுக்கு அடிக்கவில்லை என்றும் அவர்கள் மிகைப்படுத்தி கூறுகின்றனர் என்றும் ஆசிரியர் கல்பதரு கூறியுள்ளார்.

இதுபற்றி தெரிந்ததும் மாவட்ட நிர்வாகம், ஆசிரியர் கல்பதருவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளது. பின்னர் ஆசிரியர் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார்.


Next Story