டெல்லி குடியரசு தின விழாவில் அணி வகுப்பு


டெல்லி குடியரசு தின விழாவில் அணி வகுப்பு
x

மங்களூருவை சேர்ந்த லெப்டினன்ட் கமாண்டர் தீஷா அம்ரித் தலைமையில் கடற்படை அணிவகுப்பு

பெங்களூரு:-

டெல்லியில் குடியரசு தின விழா வருகிற 26-ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாட்டின் கலை, கலாசாரம், பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் அலங்கார ஊர்திகள் மற்றும் ராணுவம், போலீஸ், கடற்படை, விமானப்படை வீரர்களின் அணிவகுப்பும் நடைபெறுகிறது. இந்த நிலையில் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் லெப்டினன்ட் கமாண்டர் தீஷா அம்ரித் தலைமையில் இந்திய கடற்படை குழுவினர் அணிவகுப்பு நடக்கிறது. இதில்144 இளம் கடற்படை வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இதற்கு தலைமை தாங்கும் தீஷா அம்ரித் கர்நாடக மாநிலம் தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூருவை சேர்ந்தவர் ஆவார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு கடற்படையில் பயிற்சி முடித்து 2017-ம் ஆண்டு முதல் அந்தமான்நிக்கோபர் கடல்பகுதியில் லெப்டினன்ட் கமாண்டராக பணியாற்றி வருகிறார். மங்களூரு அருகே போலூர் திலக் நகரை சேர்ந்த அம்ரித் குமார்-லீலா அம்ரித் தம்பதியின் மகளாக இவர் பி.யூ. கம்ப்யூட்டர்் சயின்ஸ் முடித்துள்ளார். பின்னர் கடற்படை தேர்வில் கலந்துகொண்டு பல முறை தோல்வி அடைந்துள்ளார். இறுதியில் அவர் வெற்றி பெற்று தற்போது இந்திய கடற்படையில் லெப்டினன்ட் கமாண்டராக உள்ளார். இதுகுறித்து தீஷா அம்ரித் கூறுகையில், எனது தந்தை ராணுவத்தில் சேர நினைத்தார். ஆனால் அவரது கனவு நிறைவேறவில்லை. நான் பி.யூ.சி. படித்த போது என்.சி.சி.யில் சேர்ந்தேன். அப்போது முதல் நாட்டுக்காக சேவையாற்ற விரும்பினேன். அதன்படி தற்போது இந்திய கடற்படையில் லெப்டினன்ட் கமாண்டராக உள்ளேன். இது பெருமையாக உள்ளது என்றார்.


Next Story