தோழியுடன் சேர்ந்து வாழ இளம்பெண்ணுக்கு அனுமதி - கேரள ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
மனுவை விசாரித்த நீதிபதி இருவரும் சேர்ந்து வாழ அனுமதிக்கலாம் என உத்தரவிட்டார்
திருவனந்தபுரம்,
கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவாவை சேர்ந்த 22 வயதுடைய இளம்பெண்ணும், தாமரசேரியை சேர்ந்த மற்றொரு 22 வயதுடைய இளம்பெண்ணும் நெருங்கிய தோழிகளாக பழகி வந்தனர். இந்த பழக்கம் ஓரின சேர்ச்சையாக மாறியது. இவர்களின் தொடர்பு இருவரின் வீட்டாருக்கு தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவர்களது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனிடையே ஒரு இளம்பெண் திடீரென்று மாயமானார். இதை கேள்விப்பட்ட மற்றொரு பெண் கேரள ஐகோர்ட்டில் தோழியை கண்டுபிடித்து தருமாறு மனு தாக்கல் செய்தார். அதில் மனப்பூர்வமாக விரும்பி வாழ விரும்பும் எங்களை சேர்ந்து வாழ உத்தரவிட வேண்டும் எனவும் கூறி இருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி வினோத் சந்திரன் ஓரின சேர்க்கையாளர்களான பெண்கள் இருவரும் சட்டப்படி திருமண வயதை எட்டியவர்கள். எனவே இருவரும் சேர்ந்து வாழ அனுமதிக்கலாம் என உத்தரவிட்டார். மேலும் மாயமான இளம்பெண்ணை உடனடியாக கண்டு பிடித்து சேர்த்து வைக்கவும் போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்