ஒரே மரத்தில் சிறுவன்-சிறுமி தூக்கிட்டு தற்கொலை: அதிர்ச்சி சம்பவம்


ஒரே மரத்தில் சிறுவன்-சிறுமி தூக்கிட்டு தற்கொலை: அதிர்ச்சி சம்பவம்
x

சிறுவன் - சிறுமி காதலித்து வந்துள்ளனர்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் மாவட்டம் பஜரியா கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவனும், 16 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், காதலர்களான சிறுவன் - சிறுமி அக்கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று பிணமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவன், சிறுமியின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தற்கொலை சம்பவம் என தெரிவித்த போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story