குடியிருப்பின் 5-வது மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை


குடியிருப்பின் 5-வது மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 15 Feb 2023 12:15 AM IST (Updated: 15 Feb 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

மனநலம் பாதிக்கப்பட்டவர் தனியார் குடியிருப்பின் 5-வது மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

வித்யரண்யபுரா:-

பெங்களூரு வித்யரண்யபுரா அருகே என்.டி.ஐ. சந்திப்பு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சுச்சிர்(வயது 21). இவர் தனது தாயுடன் குடியிருப்பின் 5-வது மாடியில் வசித்து வந்தார். அவரது தந்தை அமெரிக்காவில் வேலை செய்து வருகிறார். சுச்சிர், அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த சில நாட்களாக அவர் மனமுடைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று அவர் தனது குடியிருப்பின் 5-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அந்த பகுதியில் இருந்தவர்கள் அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் உடனடியாக வித்யரண்யபுரா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் உடலை மீட்டு ராமய்யா ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரது குடும்பத்திடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், சுச்சிருக்கு பல மாதங்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டதும், அவர் இதேபோல் பலமுறை தற்கொலைக்கு முயன்றதும் தெரிந்தது. அவருக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று வீட்டில் அவரது தாய் தூங்கிக் கொண்டிருந்தபோது, மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்தது தெரிந்தது. எனினும், இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story