திருட்டு வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
திருட்டு வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து உடுப்பி கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
மங்களூரு:-
உடுப்பி மாவட்டம் சிவல்லி கிராமத்தை சேர்ந்தவர் துக்கண்ணா. இவரது வீடு மற்றும் அதேப்பகுதியை சேர்ந்த பாபு ஆச்சார்யா ஆகியோரின் வீடுகளில் கடந்த 2021-ம் ஆண்டு திருட்டு சம்பவம் நடந்திருந்தது. இதுகுறித்து உடுப்பி போலீசில் அவர்கள் புகார் அளித்து இருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், திருட்டு வழக்கில் ெதாடர்புடைய சுகேஷ் (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக உடுப்பி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில், வழக்கின் விசாரணை முடிவடைந்து நேற்று முன்தினம் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அப்போது சுகேஷ் மீதான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.