தெலுங்கானா: புகாரை கண்டுகொள்ளாத ஆத்திரத்தில் மாநகராட்சி அலுவலகத்தில் பாம்பை விட்டு அதிர்ச்சி ஏற்படுத்திய நபர்


தெலுங்கானா:  புகாரை கண்டுகொள்ளாத ஆத்திரத்தில் மாநகராட்சி அலுவலகத்தில் பாம்பை விட்டு அதிர்ச்சி ஏற்படுத்திய நபர்
x

தெலுங்கானாவில் தனது புகாரை கண்டுகொள்ளாத ஆத்திரத்தில் நபர் ஒருவர் வீட்டில் புகுந்த பாம்பை பிடித்து வந்து மாநகராட்சி அலுவலகத்தில் விட்டு அதிர்ச்சி ஏற்படுத்தினார்.

ஐதராபாத்,

தெலுங்கானாவில் பல்வேறு நகரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் வெள்ளநீர் புகுந்துள்ளது. வீடுகளை சுற்றிலும் மழைநீர் தேங்கி காணப்படுகிறது.

இந்த நிலையில், தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் ஆல்வால் பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவரது வீட்டுக்குள் பாம்பு ஒன்று புகுந்து உள்ளது. இதனை பிடித்த அவர், கிரேட்டர் ஐதராபாத் மாநகராட்சி வார்டு அலுவலகத்திற்கு சென்று அதனை விட்டுள்ளார்.

இதுபற்றிய வீடியோ ஒன்றும் வைரலானது. அதில், மேஜை ஒன்றின் மீது பாம்பு சற்று நேரம் அமைதியாக காணப்படுகிறது. அதன்பின்பு, மெதுவாக செல்கிறது.

அதில், நபர் ஒருவர் புகார் அளிக்கப்பட்டு உள்ளது என்று கூறுகிறார். வேறு விவரங்கள் எதுவும் தெளிவாக தெரியவரவில்லை. தனது புகாரை கண்டுகொள்ளாத ஆத்திரத்தில் அந்த நபர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு உள்ளார் என கூறப்படுகிறது. எனினும், இதுபற்றிய விவரங்களை அரசு அதிகாரிகள் உடனடியாக வெளியிடவில்லை.


Next Story